lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu unnikrishnan & anuradha sriram - enna nenatche

Loading...

ஆண்:-என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச

என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது

பெண்:-சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் (2)
குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்

ஆண்:-நான் தர சிற்பம் உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச

பெண்: தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட
சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்

ஆண்: உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச

பெண்: என் நெஞ்சுக்குழி மீதும் ஒண்ணு கேக்க நெனச்சேன்

ஆண்: ஏன் பேராச நூறாச கேக்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி

பெண்: ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன்
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்
அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன்
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்

ஆண்: மெத்தைக்கு மேல உன்னோட சேல
என்கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச

பெண்: எப்போதும் போல உன்னோட வேலை
ஆரம்பமாசுதுன்னு நானும் நெனச்சேன்

ஆண்: உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச

பெண்: நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்

ஆண்: நாம் உன்னோடு ஒண்ணாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா

பெண்: கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு
கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன்
என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்

ஆண்: சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்
நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் (2)
குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்…


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...