lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu thomas kingstone samuel - kartharin aatchi

Loading...

[verse]
பூமியும் அதின் நிறைவுகளும்
அவரையே தினம் பாடிடுதே
வானமும் அதின் சேனைகளும்
அவர் நாமத்தை தினம் துதித்திடுதே
கடல்களும் அதின் அலைகளும் கூட
அவரின் மேன்மையை புகழ்ந்திடுதே
அவர் படைத்த யாவுமே
அவரை துதித்து மகிழுதே

[pre chorus]
படைகளின் தேவனாம்
காலங்கள் கடந்தவர்
அவர் நித்திய கர்த்தராம்
ஓ!
நீதியின் செங்கோலை
உடையவர் அவர்

[hook]
நமை ஆளும் நல் இராஜாவாம்
அவரே!

[verse]
சிறகாலே மூடுவார்
பாதுகாப்பாரே
கண்ணின் மணிபோல் உன்னை என்றும்
காத்துகொள்வாரே
உனக்கெதிர் வருகிற ஆயுதம் யாவும்
வாய்த்திடாமலே போகச்செய்யும்
தேவனும் அவரே
[hook]
கடினங்கள் கடக்கும் போது
கூட வருவாரே
நிழலாகவே அருகிலே துணையிருப்பாரே
நிகழாத காரியங்கள் நடத்தி முடிப்பாரே
உன் கரத்தையே பிடித்தவர்
உன்னை கைவிடாரே

[pre chorus]
ஆயிரம் நாட்களும்
அவர் சமுகத்தில்
ஒரு இரவைப்போல் கழியுமே
நித்திரை கொள்ளாமல்
கண்ணிமையாமலே

[hook]
உனை காக்கும் நல் இராஜாவாம்
அவரே!

[verse]
தேவனே நீர் ஆள்வதினால் என்
வாழ்விலே ஒரு குறைகளும் இல்லை
கிருபைகள் எனை சூழ்வதினால்
என் பாதையில் தடுமாற்றம் இல்லை
மகத்துவத்தையும் வல்லமையும்
உடையாக அணிபவரே
உம் படைப்பை போலவே
உம்மை துதித்து மகிழ்கிறேன்
[pre chorus]
நீதியாய் ஆள்கிற
இராஜாவே உம்மைப் போற்ற
ஒரு நாவு போதாதே
உலகையே ஆள்கிற
கர்த்தாவே இன்று எந்தன்
உள்ளத்தை ஆளுமே

[hook]
இயேசுவே!


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...