lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu the casteless collective - jaibhim anthem

Loading...

மனிதனை மனிதனாகவே
மதித்திடல் வேண்டும் என்று
புனித புத்தன் அன்று
தோன்றினாரே மண்மேலே

மதம் என்றும் சாதி என்றும்
மக்களை பிரிகின்ற
மடமையை மாற்ற வேண்டும்
என்றே மீண்டும் பிறந்தாரே

வணக்கம் ப்ரோ தமிழ!
தமிழச்சி என் தங்கச்சி
நான் சொல்லும் கதையை கொஞ்சம்
காதுகொடுத்து கேளு மச்சி
எத்தனை தலைவர்கள் நம் இந்தியாவிலே
பிறந்த போதிலும்
நம் நிலைமை மாறவில்லையே
அடிமையாகவே இத்தனை காலமும்
இந்தியா முழுவதுமே இருக்குது இன்னும் சாதி வேற்றுமை
ஆனாலும் எதிர்த்த பேசிட யார் தந்தது நமக்கு உரிமை

தொட்டாலே தீட்டென்றான்
பார்த்தாலே பாவம் என்றான்
இல்லாத கட்டு கதைகளை
சொல்லி சொல்லி நம்மை தள்ளி வைத்தான்
பள்ளியில் சேர முடியாது
கோவிலுக்குள் உன் பாதம் நுழையாது
சாலையில் போக முடியாது
சாகடித்தாலும் கேட்க ஆள் யேது

ஆயிரம் ஆண்டுகள் போனது இப்படி
அனால் இன்றைக்கு மாறியது எப்படி
எடுத்து பார் உன் வரலாறு
நமக்கு முகவரி அது யாரு

பாபாசாஹேப் என்று ஒருவர்!
பாரத நாட்டின் தந்தை அவர்!
பாபாசாஹேப் என்று ஒருவர்!
உரிமையை வாங்கி தந்தது அவர்! (x2)
ரூபாயின் பிரச்சனை
இந்தியாவிலே சாதிகள்
உலகை திரும்பி பார்க்க வைத்தது
அம்பேத்கரின் சிந்தனை

வட்ட மேஜையும் வியந்து தந்தது
ரெட்டை வாக்குரிமை அன்றைக்கு
இதனை ஏற்காத மகாத்மா காந்தி
சிறையில் கிடந்தார் பட்டினி போராட்டம்
என்றாலும் சுதந்திரத்தை விடவும்
இங்கே சமத்துவம் தான் முக்கியம்
இது புரட்சியாளர் லட்சியம்

அடிமை என்பதை உணர்ந்து விட்டால் போதும்
மக்கள் படித்து விட்டால் மாறும்
உலக மதங்களை ஆய்வுகள் செய்தார்
நம்மது மதம் இனி பௌத்தம் என்றார்

சாதி ஒழியாத இந்திய நாட்டிலே
சாத்தியம் இல்லை சமத்துவம்
கல்வி இல்லாத இருண்ட வீட்டில்
என்றும் இல்லையே வெளிச்சமும்
உடலை வருத்தி இரவும் பகலும் எழுதி முடித்தார் சட்டம் மனித மாண்பினை மீட்டெடுக்க
அவர் தொடுத்தார் யுத்தம்!

ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே!
சாதிகள் இல்லை வெல்வோமே! (x4)
கற்பி ஒன்று சேர் புரட்சி செய்
கற்றுக்கொள்ள தினம் முயற்சி செய்
சாதி என்பது ஒரு மனநிலை தான்
மாற்றிக்கொண்டாலே நீ மனிதன்

சாதி மத பேதங்களை தூக்கி போடு
இனி வரும் காலங்களை மாற்றி விட
கையில் எடு சமத்துவம் மலர
மனித குளத்தை பிரித்த மதங்களை
மறந்த பிறகு பிறக்கும் மனிதம் உனக்குள்ள

எடுத்து படித்து பார் அம்பேத்கரை
அதற்கு பிறகு பார் உன் வாழ்க்கையை! (x2)

ஜெய் ஜெய் பீம் என சொல்வோமே!
சாதிகள் இல்லை வெல்வோமே! (x8)

ஜெய் பீம்!!
____________________________________________________

manithanai manithaanagave
mathithidal vendum endru
punitha buddhan andru
thondrinaare manmele
matham endrum saathi endrum
makkalai pirikindra
madamaiyai maatra vendum
endre meendum piranthaare

vanakkam bro, thamizha!
thamizhachi en thangachi
naan sollum kathaiyai konjam kaathu koduthu kelu machi
ethanai thalaivargal nam inthiyaavile pirantha pothilum
nam nilamai maaravilaiye, adimaiyaagave ithanai kaalamum
inthiya muzhuvathume irukkuthu innum saathi vetrumai
a~n~lum ethirtha pesida yaar thanthathu namakku urimai
thotaale theetendraan
paarthale paavam endraan
illaatha kattu kathaigalai solli solli nammai thalli vaithaan
palliyil sera mudiyaathu
kovilukkul un paatham nuzhaiyaathu
saalaiyil poga mudiyaathu
saagadithaalum ketka aal yethu
aayiram aandugal ponathu ippadi
a~n~l indraikku maariyathu eppadi
eduthu paar un varalaaru
namakku mugavaari adhu yaaru

babasaheb endru oruvaar!
baaratha naatin thanthai avar!
babasaheb endru oruvaar!
urimayai vaangi thanthathu avar! (x2)

roobaiyin prechanai, inthiyavile saathigal
ulagai thirumbi paarka vaithathu ambedkaarin sinthanai
vatta mejaiyum viyanthu thanthathu rettai vaaku urimai andraikku
ithanai yerkaatha mahatma gandhi sirayil kidanthaar pattini poraatam
endraalum suthanthirathai vidavum
ingae samathuvam thaan mukiyam
ithu puratchiyalar latchiyam
adimai enbathai unarnthu vitaal pothum
makkal padithu vitaal maarum
ulaga mathangalai ayvugal seithaar
nammathu matham ini boutham endraar
saathi ozhiyaatha inthiya naatile saathiyam illai samathuvam
kalvi illatha irunda veetil endrum illaye velichamum
udalai varuthi, iravum pagalum ezhuthi mudithaar sattam
manitha maanbinai meetu edukka avar thoduthaar yutham

jai jai bhim ena solvaame!
saathigal illai velvome! (x4)

karpi ondru ser puratchi sei
katrukolla thinam muyarchi sei
saathi enbathu oru mananilai thaan
maatrikondaale nee manithan (x2)
saathi matha baethangalai thooki podu
ini varum kaalangali maatrivida
kaiyil edu samathuvam
malara manitha kulathai piritha mathangalai
marantha piragu pirakk~m manitham unakulla

eduthu padithu paar ambedkarai
atharku piragu paar un vaazhkaiyai (x2)

jai jai bhim ena solvaame!
saathigal illai velvome! (x8)

jai bhim!


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...