lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu santhosh dhayanidhi & shakthisree gopalan - naan thoda

Loading...

[பாடல் வரிகள் ~ “நான் தொட” ~ சந்தோஷ் தயாநிதி, சக்திஸ்ரீ கோபாலன்]

[கோரஸ்]
நான், தொட, நீ மறைவது ஏன்?
நீர், குமிழ், என உடைவது ஏன்?
உன், திசை, எனை மறந்தது ஏன்?
காற்றிலே, எனை அழைப்பது ஏன்?
அருகினில் வாசம் தொலைவது ஏன்?
உயிரினுள் ஏதோ உருள்வது ஏன்?
விரல்களின் ரேகை விலகுவதேன்?
கனவினில் வேர்கள் கருகுவதேன்?

[முன்~கோரஸ்]
மின்னல் பட்டு பூத்த மொட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி
போகின்றதோ…
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி
தேய்கின்றதோ…

[கோரஸ்]
நான், தொட, நீ மறைவது ஏன்?
நீர், குமிழ், என உடைவது ஏன்?
[வசனம்]
விரல் கோர்த்து கதைகளை கதைக்க
உன்னை மனம் தேடிடுதே
என்னை தாண்டி நீயும் போனால்
இதயம் மெதுவாய் மெழுகென அணைந்திடும்
வழிப்போக்கன் விரல்களில் எதற்கு
ஒளி காய்க்கும் காதல் அகல் விளக்கு?
ஒன்றே ஒன்று சொல்வேன் என்று
நெஞ்சம் இன்று துண்டு துண்டு, சென்றுவிடு என்னை கொன்று
தேடி தினம் தினம், நானும் தொலைகிறேன்
உயிர் மலர் என்று சருகென உதிர்ந்திடும்

[முன்~கோரஸ்]
மின்னல் பட்டு பூத்த மொட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி
போகின்றதோ…
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி
தேய்கின்றதோ…

[கோரஸ்]
நான், தொட, நீ மறைவது ஏன்?
நீர், குமிழ், என உடைவது ஏன்?
உன், இசை, எனை மறந்தது ஏன்?
காற்றிலே, எனை அழைப்பது ஏன்?
அருகினில் வாசம் தொலைவது ஏன்?
உயிரினுள் ஏதோ உருள்வது ஏன்?
விரல்களின் ரேகை விலகுவதேன்?
கனவினில் வேர்கள் கருகுவதேன்?
[முன்~கோரஸ்]
மின்னல் பட்டு பூத்த மொட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி
போகின்றதோ…
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி
தேய்கின்றதோ…

[முடிவு]
நான்…


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...