lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu s. p. balasubrahmanyam feat. sujatha - en veetu thotathil (from ''gentleman'')

Loading...

என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்.

என் வீட்டு தென்னங் கீற்றை இப்போதே கேட்டுப் பார்
என் நெஞ்சை சொல்லுமே.

என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டு பார்.

என் வீட்டு தென்னங் கீற்றை இப்போதே கேட்டு பார்
என் நெஞ்சை சொல்லுமே.

வாய் பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது
வாய் பூட்டு சட்டமெல்லாம் பெண்ணுக்கு ஆகாது.

வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ் சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கு கேக்காது.

ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது
ஆசை துடிக்கின்றதோ.

உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்.

உன் வீட்டு தென்னங் கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுப் பார்
என் பேர் சொல்லுமே.

உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்.

உன் வீட்டு தென்னங் கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுப் பார்
என் பேர் சொல்லுமே.

சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே.

சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது.

எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது.
ம் ஹும் அனுபவமோ.

என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்.

என் வீட்டு தென்னங் கீற்றை இப்போதே கேட்டுப் பார்
என் நெஞ்சை சொல்லுமே.

உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்.

உன் வீட்டு தென்னங் கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுப் பார்
என் பேர் சொல்லுமே.

Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...