lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu k. s. chithra - soul of varisu

Loading...

ஆ~ஆ~அ
அ~ஆ~அ

ஆராரி~ராரிரோ கேக்குதம்மா!
நேரினில் வந்தது என் நிஜமா?
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நொடியும் மெல்லிசை ஆகுதம்மா!
பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரனம் சூழுதம்மா (ஓ~ஓ)
நெஞ்சம் ஆனந்த மேகத்தில் ஊஞ்சலும் ஆடுதம்மா! (ஒ~ஓ)

என் உயிரில் இருந்து, பிரிந்து, பகுதி இங்கே!
நான் இழந்த சிரிப்பும், இதய துடிப்பும் மீண்டும் இங்கே!

இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்று விடுமா?

என் இதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும்
தங்கிவிடுமா?

பால் முகம் காணவே, நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்குதே, ஆரோ!
கால் தடம் வீழவே, நான் துடித்தேன்
உன்னை தாய் மடி ஏங்குதே, தாரோ!


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...