lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ilaiyaraaja - ponna pola aatha

Loading...

பொன்னை போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
என்னை பெத்த ஆத்தா

கண்ணீர தான் பாத்தா
சொல்லிச் சொல்லி ஆறாது
சொன்னா துயர் தீராது
சொல்லிச் சொல்லி ஆறாது
சொன்னா துயர் தீராது
பொன்னை போல ஆத்தா
என்னை பெத்து போட்டா அடி
என்னை பெத்த ஆத்தா
கண்ணீர தான் பாத்தா

ஓ …ஓ….ஓ.ஓ …ஓ….ஓ
திட்டி திட்டி பேசினாலும்
வட்டியில சோறு வப்பா
ஒட்டிபோன ஒடம்புன்னாலும்
உசுர விட்டு பாசம் வப்பா
திண்னை வாயில் திட்டினாலும்
என்னை அவ நொந்ததில்ல.
கந்தல் துணி கட்டினாலும்
கண் கசங்க பார்த்தயில்லை
பொன்ன கேக்கும் வாயில்
ஒரு சேலை கேட்ட ஆத்தா
நூல கூட நானும் உனக்கு வாங்கித் தந்ததில்ல
அடி… ஆத்தா ஆ………

பொன்னை போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
என்னை பெத்த ஆத்தா
கண்ணீர தான் பாத்தா

வெட்டியில ஊரைச் சுத்தும்
வேலையத்த மகனும் உண்டு
வெட்டிப் பய என்னை போல
எத்தனையோ பேரும் உண்டு
கெட்டுப் போன மகளும் உண்டு
தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு
கேடு கெட்ட தந்தையும் உண்டு
கூறு கெட்ட தாரமும் உண்டு
கெட்டுப் போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டுப் போன தாயி எங்கும் இல்லவே இல்லை

அடி… ஆத்தா ஆ………

பொன்னை போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
என்னை பெத்த ஆத்தா
கண்ணீர தான் பாத்தா

சொல்லிச் சொல்லி ஆறாது
சொன்னா துயர் தீராது
சொல்லிச் சொல்லி ஆறாது
சொன்னா துயர் தீராது

பொன்னை போல ஆத்தா
என்னை பெத்து போட்டா – அடி
என்னை பெத்த ஆத்தா
கண்ணீர தான் பாத்தா


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...