lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu anthony daasan - stalindhaan vaaraaru vidiyal thara poraaru

Loading...

ஸ்டாலின்தான் வாராரு
விடியல் தர போறாரு
அது தான் அது தான்
மக்களோட முடிவு

ஸ்டாலின்தான் வாராரு
நல்லாட்சி தர போறாரு
அது தான் அது தான்
எங்களோட விடிவு

இருட்டா கெடக்கும் வானத்துல
ஒளிகீத்து கீத்து பொறக்குதம்மா
வறண்டு கெடக்கும் பூமிக்குள்ள
புது ஊத்து ஒன்னு பொறக்குதம்மா
மனசு நெரம்பி சிரிக்குதம்மா
கருப்பு செவப்பு கம்பளம் விரிக்குதம்மா

வாராரும்மா அவரு வாராரும்மா
கொடிய நாட்ட போறாரும்மா
வாராரும்மா அவரு வாராரும்மா
கொடிய நாட்ட போறாரும்மா

முதுகெலும்பில்லாத ஆட்சியத்தான்
தூக்கி எறி வாராரம்மா
முன்பின் காணாத வெற்றியைத்தான்
நமக்கு கொடுக்க வாராரம்மா
ஸ்டாலின்தான் வாராரு
விடியல் தர போறாரு
அது தான் அது தான்
மக்களோட முடிவு

ஸ்டாலின்தான் வாராரு
நல்லாட்சி தர போறாரு
அது தான் அது தான்
எங்களோட விடிவு

தமிழ் பண்பாட்டை
பெருமையை பாதுகாக்க
ஸ்டாலின்தான் வாராரு
விடியல் தர போறாரு
ஸ்டாலின்தான் வாராரு

தமிழ் மானத்தை ஏலம்
போட்டதாரய்யா
நம்மை உரிமையெல்லாம்
கோட்டை விட்டதாரய்யா

போராடும் மனுஷன்மேல் தோட்டா
மாடோட விளையாட பீட்டா
குருவிங்க தலைமேல நீட்டா
தமிழங்க வாழ்க்கை விளையாட்டா
இனி அவுங்களுக்கு போட்டி அந்த
நோட்டா நோட்டா நோட்டா நோட்டா
நரிங்க ஆளும் காட்டுக்குள்ள
ஒரு சிங்கம் நடந்து வாராரும்மா
ஏழைங்க கண்ணீரை தொடச்சுவிட்டு
சிரிப்ப பரிசா தாராரும்மா
தாராரும்மா தாராரும்மா
தாராரும்மா

ஸ்டாலின்தான் வாராரு
விடியல் தர போறாரு
அது தான் அது தான்
மக்களோட முடிவு

ஸ்டாலின்தான் வாராரு
நல்லாட்சி தர போறாரு
அது தான் அது தான்
எங்களோட விடிவு

தமிழின் புகழை மீட்டெடுக்க
ஒளிமயமான எதிர்காலம் படைக்க
ஸ்டாலின்தான் வாராரு

மொழிய திணிக்க பாக்குறவன்
இங்க வால வால ஆட்டாத
மதத்தை வச்சி அரசியலா
இங்க கால கீழ வைக்காத
எதிர்த்து கேட்க ஆள் இருக்கு
உள்ள பெரியார் ஏத்துன நெருப்பிருக்கு
வாராருய்யா அவரு வாராருய்யா
கோட்டையில் ஏற போறாரய்யா
வாராருய்யா அவரு வாராருய்யா
கோட்டையில் ஏற போறாரய்யா

சிரிக்க மறந்த ஜனங்களுக்கு
மகிழ்ச்சி அள்ளி வாராருய்யா
முன்பின் காணாத வெற்றியைத்தான்
நமக்கு கொடுக்க வாராருய்யா

ஸ்டாலின்தான் வாராரு
விடியல் தர போறாரு
அது தான் அது தான்
மக்களோட முடிவு

ஸ்டாலின்தான் வாராரு
நல்லாட்சி தர போறாரு
அது தான் அது தான்
எங்களோட விடிவு

சமூகநீதி சம உரிமை
சுயமரியாதை நிலைநிறுத்த
ஸ்டாலின்தான் வாராரு
விடியல் தர போறாரு
ஸ்டாலின்தான் வாராரு
விடியல் தர போறாரு


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...